/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 09, 2024 02:59 AM
கரூர்: கரூர் மாநகராட்சி சாதாரண, அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:
சுரேஷ் (அ.தி.மு.க.,): மாநகராட்சி திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஓராண்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவு என டெண்டர் வைக்கப்-பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், இது-போன்ற செலவு தேவைதானா?.
சுதா (கமிஷனர்): இன்னும் டெண்டர் விடப்படவில்லை. டெண்டர் விட கூட்டத்தில் அனுமதி மட்டுமே கேட்கப்பட்டுள்-ளது. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே டெண்டர் விடப்படும்.
ஸ்டீபன்பாபு (காங்.,): மாநகராட்சியில், 81 கடைகள் வாடகை பாக்கி காரணமாக குத்தகை ரத்து செய்ய தீர்மானம் வைக்கப்பட்-டுள்ளது. அந்த கடைகள் எவ்வளவு பாக்கி வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு ஏலம் வெளிப்படையுடன் நடக்க வேண்டும்.
உதவி வருவாய் அலுவலர்: இந்த கடைகள், எட்டு கோடி ரூபாய் அளவில் பாக்கி வைத்துள்ளனர். அரசு விதிகள் படி, டெண்டர் நடக்கும்.
பா.பூபதி (தி.மு.க.,): மாநகராட்சி மூன்றாவது மண்டலம் மிகவும் பின்தங்கி இருக்கிறது, 18 நாட்களாக தண்ணீர் வர-வில்லை. காவிரி ஆற்றில் வெள்ளம் போகியும், குடிநீர் கிடைக்க-வில்லை. சாலைகள் குண்டும், குழியுமாக
உள்ளது.
வேலுசாமி (தி.மு.க.,): ஒவ்வொரு கூட்டத்திலும் பொதுநிதி டெண்டர் வைத்தால், யாரும் வேலை செய்வது கிடையாது என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஏன்
பொதுநிதி வேலை இல்லை என்று காரணம் சொல்லுங்கள். வார்டு வேலை நடக்கவில்லை என்றால் மக்கள் அடிக்க
வருகின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் உங்கள்
பதில் கேவலமாக இருக்கிறது. இனி பொதுநிதி டெண்டர் வைக்-காதீங்க.
இவ்வாறு பேசினர்.
சாதாரண கூட்டத்தில், 24, அவரச கூட்டத்தில், 56 என மொத்தம், 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன.