/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல் பதுக்கிய பெண் மீது வழக்கு பதிவு
/
மணல் பதுக்கிய பெண் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 07, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் கீழஅக்ரஹார தெருவில் விஜயகுமார் மனைவி சசிகலா என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகில், ஒரு யூனிட் காவிரி ஆற்று மணல் சிமென்ட் சாக்கில், 85 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது.
குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி, தாசில்தார் மகேந்திரன், ஆர்.ஐ., குணா, வி.ஏ.ஓ., விமலா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, மணல் மூட்டையை தனது வீட்டின் அருகே அடுக்கி வைத்திருந்த, சசிகலா என்பவர் மீது வி.ஏ.ஓ., விமலா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.