/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை பிரித்தெடுக்கும் இடத்தில் தீ விபத்து; போராடி அணைப்பு
/
குப்பை பிரித்தெடுக்கும் இடத்தில் தீ விபத்து; போராடி அணைப்பு
குப்பை பிரித்தெடுக்கும் இடத்தில் தீ விபத்து; போராடி அணைப்பு
குப்பை பிரித்தெடுக்கும் இடத்தில் தீ விபத்து; போராடி அணைப்பு
ADDED : ஜூலை 21, 2024 02:54 AM
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கரூர் - திருச்சி பழைய மேம்பாலம் நெடுஞ்சாலை கீழ்புறத்தில் கொட்டப்படுகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை மூலம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. பின்னர் தேவையில்லாத குப்பை ஒரு மாதம் கழித்து எரிக்கப்படுகிறது. குப்பை எரிக்கும் போது நெடுஞ்சாலை பகுதி புகை மண்டலமாக மாறி விடும். அப்போது வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று குப்பை கொட்டும் இடத்தில் தீ பரவி, காற்றின் காரணமாக புகை அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். முசிறி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்ததால், அருகில் செல்லும் வாய்க்கால் நீரை கொண்டு தீ அணைக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் நேரில் வந்து பார்வையிட்டு, குப்பையை இந்த பகுதியில் கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்குமாறு பஞ்., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.