/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் படுகாயம்
/
டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் படுகாயம்
ADDED : ஜூன் 19, 2024 01:43 AM
அரவக்குறிச்சி, புலியூர், அம்பேத்கர் நகர் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 45. இவர் வேலாயுதம்பாளையத்தில் இருந்து, மூலமங்கலம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். டி.என்.பி.எல்., சாலை அருகே சென்றபோது எதிரே, ஈரோடு மாவட்டம் பவானி கீழவாணி அருகே உள்ள மூங்கில் பேட்டை பகுதியை சேர்ந்த ரவிக்குமார், 23, என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து குமார் மனைவி ராஜேஸ்வரி, 39, அளித்த புகார்படி வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.