/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரவு வேலை முடிந்து துாங்க சென்றவர் திடீரென உயிரிழப்பு
/
இரவு வேலை முடிந்து துாங்க சென்றவர் திடீரென உயிரிழப்பு
இரவு வேலை முடிந்து துாங்க சென்றவர் திடீரென உயிரிழப்பு
இரவு வேலை முடிந்து துாங்க சென்றவர் திடீரென உயிரிழப்பு
ADDED : ஆக 07, 2024 01:46 AM
அரவக்குறிச்சி, இரவு வேலை முடிந்து, துாங்கச் சென்றவர் திடீரென உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே புஞ்சைகாளக்குறிச்சி வெங்கக்கல்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. இவர், ஆண்டிபட்டிக்கோட்டை பகுதியில் செயல்படும் ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நேத்ராவதி, 43, தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனியே வசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பணி முடித்து விட்டு, ஓய்வுக்காக தனது அறைக்கு ரவிச்சந்திரன் சென்றுள்ளார். அங்கு துாங்கிக் கொண்டிருந்த நிலையில், காலை நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து, ஹோட்டலில் பணியாற்றும் சக ஊழியர்கள் ரவிச்சந்திரனின் மனைவி நேத்ராவதிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த நேத்ராவதி அதிர்ச்சியடைந்து, அரவக்குறிச்சி போலீசாருக்கு புகார் அளித்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.