/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலையில் திருமண மண்டபம் அமைக்க கோரிக்கை
/
அய்யர்மலையில் திருமண மண்டபம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் பல மாவட்டங்களில் இருந்து பக்-தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் நலன் கருதி ரோப்கார் வசதி, திருமண மண்டபம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து ரோப்கார் பணி, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் கடந்த, 24ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அதேசமயம் இங்கு திரு-மண மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க-வேண்டும் என பொது மக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.