/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஆக 06, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, தன், 'ஹீரோ மேஸ்ட்ரோ' டூவீலரில் நாமகிரிப்பேட்டையில் இருந்து பெருமாகவுண்டம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ஒடுவன்குறிச்சி அடுத்த தனியார் கிழங்கு மில் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ராஜ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.