/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளி ஆசிரியரின் நகையை திருடிய மாடி வீட்டு பெண் கைது
/
அரசு பள்ளி ஆசிரியரின் நகையை திருடிய மாடி வீட்டு பெண் கைது
அரசு பள்ளி ஆசிரியரின் நகையை திருடிய மாடி வீட்டு பெண் கைது
அரசு பள்ளி ஆசிரியரின் நகையை திருடிய மாடி வீட்டு பெண் கைது
ADDED : மார் 12, 2025 07:58 AM
கரூர்: குளித்தலையில், அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் தங்க நகைகளை திருடிய, மாடியில் குடியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை, அண்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரது மனைவி அன்பழகி, 51. இவர், லாலாப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர் கடந்த, 3ல் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய போது, கதவு திறந்திருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 43 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து, போலீசில் அன்பழகி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அன்பழகி வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும், ரத்தினம் என்பவரது மனைவி சுகந்தி, 39, நகையை திருடியது தெரிய வந்தது. பின்னர் சுகந்தியை, குளித்தலை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். சுகந்தியிடம் இருந்து தங்க நகைகளை, போலீசார் மீட்டனர்.
சுகந்தி மீது திருச்சியில், அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கும், திருச்சியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி வீட்டில், சுகந்தி வேலை செய்து வந்தவர் எனவும், குளித்தலை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.