/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை
/
பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை
ADDED : மே 30, 2024 01:38 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, பொன் நகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் கருவிகள், பூங்காவின் உள்பக்க சுவரை சுற்றி நடைபயிற்சிக்காக பேவர் பிளாக் நடைபாதைகள், அமர்ந்து ஓய்வெடுக்க கிரானைட் இருக்கைகள், கழிவறை வசதி, 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. இரண்டு பிரிவாக உள்ள இந்த பூங்காவில் அதிகளவில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.
குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் போதுமான அளவு இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்து விளையாடும் சூழ்நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, கூடுதல் உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.