/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு 300 பெண்கள் குத்து விளக்கு பூஜை
/
ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு 300 பெண்கள் குத்து விளக்கு பூஜை
ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு 300 பெண்கள் குத்து விளக்கு பூஜை
ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு 300 பெண்கள் குத்து விளக்கு பூஜை
ADDED : ஆக 17, 2024 04:55 AM
கரூர்: ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு தினத்தை-யொட்டி கரூர் அருகே, 300 க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்-கேற்ற குத்து விளக்கு பூஜை நடந்தது.
கரூர் மாவட்டம், காக்காவாடி அன்னை காமாட்சியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி நோன்பு பூஜை, நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ேஹாமத் துடன் தொடங்கியது.
பிறகு துர்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜைகள், வாஸ்து ேஹாமம் நடந்தது. அதை தொடர்ந்து, 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்ற குத்து விளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அன்னை காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிறகு, பக்தர் களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, 24 மனை செட்-டியார்கள் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்து, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கடைசி வெள்ளியையொட்டி, அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.

