/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய உறுப்பினர் சேர்த்தல் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
/
புதிய உறுப்பினர் சேர்த்தல் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 15, 2024 02:47 AM
குளித்தலை: குளித்தலையில், பா.ஜ., புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்-பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பா.ஜ., புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா, மாவட்ட பொதுச்செயலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, உறுப்பி-னர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்-கினார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,'' தமிழகத்தில் ஒரு கோடி பேரை, பா.ஜ.,வில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை, நிறைவேற்ற சொல்லி ஆசிரி-யர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை,'' என்றார்.