/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சிறையிலடைப்பு
/
அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சிறையிலடைப்பு
ADDED : ஜூலை 26, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த, 17ல் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, அவர் மீது பதிவான வழக்குகளில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, விசாாரணை முடிந்த நிலையில், நேற்று இரவு போலீசார் கரூர் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வரும், 31 வரை திருச்சி மத்திய சிறையில் அவரை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.