/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5 ஆண்டுகளுக்கு பின் தென்கரை வாய்க்கால் துார் வாரியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
5 ஆண்டுகளுக்கு பின் தென்கரை வாய்க்கால் துார் வாரியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
5 ஆண்டுகளுக்கு பின் தென்கரை வாய்க்கால் துார் வாரியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
5 ஆண்டுகளுக்கு பின் தென்கரை வாய்க்கால் துார் வாரியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 14, 2024 01:36 AM
கரூர்,
கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில், 5 ஆண்டுகளுக்கு பின் தென்கரை வாய்க்காலில், துார்வாரும் பணி முடிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தென்கரை வாய்க்கால் பிரிந்து கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை வழியாக கரூர் மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை எல்லை வரை செல்கிறது.
அங்கிருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் என்ற பெயரில் திருச்சி மாவட்டம், புங்கனுார் வரை செல்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும், கால் நடைகள் வளர்ப்புக்கும் காரணமான இந்த வாய்க்கால் துார்வாரப்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால், வாய்க்காலில் ஆங்காங்கே செடிகொடிகளும், ஆகாயத் தாமரைகளும் அதிகளவில் முளைத்து, வாய்க்காலை ஆக்கிரமித்திருந்தன. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேட்டூர் அணை திறக்கும் முன் வாய்க்காலை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது வாய்க்காலை துார் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் முக்கியமானது தென்கரை வாய்க்கால். இந்த வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில், 1,000 ஏக்கரும், திருச்சி மாவட்டத்தில், 10,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் துார் வாரப்படாமல் இருந்ததால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது, தண்ணீர்
பெட்டவாய்த்தலை வரை கூட செல்வதில்லை. காரணம் செடி, கொடிகள் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்தன. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையடுத்து தமிழக அரசு வாய்க்காலை துார் வார, 89 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
கடந்த வாரம் துார் வாரப்பட்டதால், வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி கடைமடையைச் சென்றடையும். தண்ணீர் வாய்க்கலில் அதிகளவில் செல்லும்போது, வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.