/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
/
இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
ADDED : நவ 07, 2024 01:15 AM
இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம்
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
கரூர், நவ. 7-
மாயனுாரில் கதவணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என, மாயனுார் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.05 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கும் வகையில் கடந்த, 2008 ல் பணிகள் தொடங்கப்பட்டு, 2014ல் கதவணை திறக்கப்பட்டது.அதற்காக, மேல கட்டளை, நத்தமேடு, கட்டளை, ரங்கநாதபுரம், மேல மாயனுார், கீழ் மாயனுார் ஆகிய கிராமங்களை சேர்ந்த, 38 விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்டு, 12 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டம், சட்டமன்ற குழு, எம்.எல்.ஏ.,- எம்.பி.,களிடம் மனு கொடுக்கப்பட்டும் பயன் இல்லை.கதவணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 30 லட்ச ரூபாய் இழப்பீடு, சாகுபடி நஷ்ட ஈடாக, 12 ஆண்டு களுக்கு, ஆறு லட்ச ரூபாய் மற்றும் மணவாசியில் கட்டப்பட்டு வரும், விவசாய கல்லுாரியில், விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
இதற்கு உடனடி தீர்வு காணாத பட்சத்தில், விவசாயிகளை திரட்டி, விரைவில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன், போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.