/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு
ADDED : ஜூன் 14, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
துணைபொதுமேலாளர்(வனம்) ஜெயக்குமார் தலைமைவகித்தார். குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் உறுதி மொழியை ஆலை பணியாளர்கள் ஏற்று கொண்டனர். முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.