/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு
/
அரவக்குறிச்சி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு
ADDED : பிப் 23, 2025 03:59 AM
அரவக்குறிச்சி: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, திருக்குறள் பேரவை நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
ஒவ்வொருவரும், தன்னுடைய தாய் மொழி மீது பற்றுதலோடு இருத்தல் வேண்டும். தன் தாய்மொழியின் சிறப்புகளை அறிந்து, அதனை பெருமை கொள்ளுதல் வேண்டும். அத-னுடைய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள வேண்டி, 1999ல், யுனெஸ்கோ பொது மாநாட்டில் பிப்., 21-ஐ உலகதாய்மொழி தினமாக கொண்டாட அறிவித்தது. 2000 ஆண்டு முதல் உலக தாய்மொழி தினத்தை கொண்டாடி வரு-கிறோம்.
தாய் மொழியின் சிறப்பை, மாணவர்கள் அறிவதற்காக கரூர் திருக்குறள் பேரவை சார்பில், தாய்மொழி தின போட்டியை அறி-வித்தது. அதில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மகிமா, 100 திருக்குறள்களையும், பாரதிதாசன் பாடலையும் ஒப்பு-வித்து வெள்ளி நாணயம் பரிசு பெற்றார். இதற்கான சான்றிதழ், வெள்ளி நாணயத்தை தமிழ்ச்செம்மல் மேலை பழனியப்பன் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவியை, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், பாண்-டித்துரை ஆகியோர் பாராட்டினர்.

