/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
/
கலைஞர் கனவு இல்லம் விண்ணப்பம் வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துாரில் வேங்காம்பட்டி பஞ்., அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், புதிய வீடுகள் கட்டும் பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்ப படிவத்துடன் வங்கி கணக்கு புத்தகம், நகல் ஆதார் நகல், நுாறு நாள் வேலை வாய்ப்பு அட்டை நகல், பட்டா நகல் மற்றும் பயனாளிகள் புகைப்படம் பெறப்பட்டது.