/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்குவாரியில் குளித்தவர்களை தாக்கி, பைக்குக்கு தீ வைப்பு
/
கல்குவாரியில் குளித்தவர்களை தாக்கி, பைக்குக்கு தீ வைப்பு
கல்குவாரியில் குளித்தவர்களை தாக்கி, பைக்குக்கு தீ வைப்பு
கல்குவாரியில் குளித்தவர்களை தாக்கி, பைக்குக்கு தீ வைப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:08 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, உப்பிடமங்கலம் டவுன் பஞ்., வெண்ணிலை காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரேம்குமார், 27, சென்ட்ரிங் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த சங்கிலிமுத்து, 25, சங்கர், 23, மற்றொரு பிரேம் குமார், 27, ஆகியோர் இரண்டு பைக்கில் வந்து, மோட்டாங்கிணம் அருகிலுள்ள குவாரியில் நேற்று முன்தினம் மாலை, 4:40 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த கரூர் அடுத்த, கருப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்த மணிவேல், மாணிக்கம், பிச்சை, வடிவேல் ஆகிய நான்கு பேர் குவாரியில் குளித்தவர்களை பார்த்து, நீங்கள் எப்படி இங்கு வந்து குளிக்கலாம் என, தகாத வார்த்தையில் பேசி தாக்கினர். பின், இரு பைக்குகளை சேதப்படுத்தி தீ வைத்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள், அங்கு வருவதை பார்த்தலும் நான்கு பேரும் தப்பினர். காயமடைந்த பிரேம்குமார், சங்கிலி முத்து, சங்கர், மற்றொரு பிரேம்குமார் ஆகியோர், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மணிவேல் உள்பட நான்கு பேர் மீதும், எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே வழக்கில் மாணிக்கம், 40, கொடுத்த புகார்படி பிரேம்குமார் உள்பட நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.