/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர்கள் அச்சமில்லாமல் ஓட்டளிக்க குளித்தலையில் விழிப்புணர்வு பேரணி

ADDED : மார் 31, 2024 04:17 AM
குளித்தலை: குளித்தலையில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மற்றும் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், போலீசார் அணி
வகுப்பு பேரணியை கரூர்
எஸ்.பி., தொடங்கி வைத்தார்.
குளித்தலை, பெரியபாலம் பரிசல்துறை தனியார் பள்ளியில் நேற்று காலை, 7:45 மணியளவில் போலீசார் அணிவகுப்பு பேரணியை, கரூர் எஸ்.பி., பிரபாகர், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி ஆகியோர் கொடி
யசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்யவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் விழிப்புணர்வு பேரணி பெரிய பாலம், மாரியம்மன் கோவில், கடைவீதி, பஸ் ஸ்டாண்டு, காவேரி நகர், அண்ணா நகர், வைகைநல்லுார் அக்ரஹாரம் வழியாக திருச்சி கரூர் நெடுஞ்சாலை, முசிறி மணப்பாறை நெடுஞ்சாலை நான்கு வழி சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு பேரணி முடிவுற்றது.
குளித்தலை டி.எஸ்.பி.,செந்தில்குமார், தாசில்தார் சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.