/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புற்று மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
புற்று மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 17, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கப்பிள்-ளையூர் அம்மன் நகரில், மண் மேட்டு புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு பால்குட ஊர்வலம், நேற்று காலை, நடந்தது.
இதில், குளித்தலை கடம்பன் துறை காவிரி நதிக்கரையில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி எடுத்துக்-கொண்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, பால், மஞ்சள், தேன், பன்னீர், இளநீர் மற்றும் திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அனைவ-ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

