/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி கட்டடம் திறப்பு தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை
/
அங்கன்வாடி கட்டடம் திறப்பு தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை
அங்கன்வாடி கட்டடம் திறப்பு தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை
அங்கன்வாடி கட்டடம் திறப்பு தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை
ADDED : ஆக 09, 2024 02:53 AM
குளித்தலை: ஆர்.டி. மலை, புழுதேரி பஞ்., பகுதியில் புதிய தார் சாலை பணிக்கான பூமி பூஜை மற்றும் அங்கன்வாடி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் ஆர்.டி. மலை முதல் புழுதேரி வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம், 99 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. தோகை-மலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் புழுதேரி அண்ணாதுரை தலைமை வைத்தார்.
தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், யூனியன் கவுன்சிலர் சின்னையன், பஞ்..,தலைவர்கள் புழுதேரி தனலட்சுமிமகாமுனி, ஆர்.டி. மலை பொன்னம்மாள்பாலமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சந்திரன், துணைத் தலைவர்கள் பாலகி-ருஷ்ணன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், மணி-மேகலை மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
தொடர்ந்து, ஆர்.டி. மலை பஞ்., அழகாபுரி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 11 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்து, மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.