ADDED : ஆக 05, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அம்மாப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார், 35; இவர், நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, பாரதி மளிகை கடை முன், நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சசிக்குமார் சர்ட் பாக்கெட்டில் இருந்து, கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் மணி, 26, என்பவர், 500 ரூபாயை திருடியுள்ளார். இதுகுறித்து, சசிக்குமார் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார், தமிழ்மணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.