ADDED : ஏப் 19, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, தனியார் பள்ளி பஸ் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.
கரூர்
மாவட்டம், ஆத்துார் பிரிவு ஆதவன் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது
மகன் மோகித், 4; இவன் கடந்த, 17ல் மாலை, வீடு அருகே சாலையில் விளையாடி
கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக சாமிநாதன், 53, என்பவர்
ஓட்டி சென்ற, தனியார் பள்ளி பஸ் மோகித் மீது மோதியது. அதில் சம்பவ
இடத்திலேயே மோகித் உயிரிழந்தான். கரூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.

