/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு; பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் விடுமுறை
/
குடிநீர் குழாய் உடைப்பு; பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் விடுமுறை
குடிநீர் குழாய் உடைப்பு; பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் விடுமுறை
குடிநீர் குழாய் உடைப்பு; பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் விடுமுறை
ADDED : ஆக 22, 2024 01:46 AM
குளித்தலை, தேசியமங்கலம் பகுதியில், மணப்பாறை மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அரசு பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால், இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறை மருங்காபுரிக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், மிகப்பெரிய அளவில் குழாய் அமைக்கப்பட்டு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தேசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வகுப்பறை மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.
குழாய் உடைப்பு ஏற்பட்டதால், 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயில முடியாததால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்பாளிடம், பள்ளி தலைமையாசிரியர் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், குளித்தலையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்ட முகாமிற்காக வருகை தந்த டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகாம்பாள், தாசில்தார் சுரேஷ், கிருஷ்ணராயபுரம் யூனியன் ஏ.பி.டி.ஒ., முருகேசன், சிவாயம் பஞ்., செயலாளர் அருள் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை விட வேண்டும் என தெரிவித்தார். அதன்படி நேற்றும், இன்றும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையில் மணப்பாறை மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மின் மோட்டார் நிறுத்தப்பட்டது. பள்ளி வளாகத்திற்குள் வெள்ளம் போல் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் பஞ்., பணியாளர்கள் ஈடுபட்டனர்.