/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுரங்கப்பாலம் பணி: டவுன் பஞ்., குடிநீர் குழாய் சேதம்
/
சுரங்கப்பாலம் பணி: டவுன் பஞ்., குடிநீர் குழாய் சேதம்
சுரங்கப்பாலம் பணி: டவுன் பஞ்., குடிநீர் குழாய் சேதம்
சுரங்கப்பாலம் பணி: டவுன் பஞ்., குடிநீர் குழாய் சேதம்
ADDED : ஆக 18, 2024 03:22 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டும-ருதுார் ரயில்வே பாதையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த, இரண்டு மாதமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் பணியின் போது, மருதுார் டவுன் பஞ்., பகுதிக்கு கொண்டு செல்லப்படும் காவிரி கூட்டு குடிநீர் குழாய், சேதமானது. இதனால், பல நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதேபோல், நேற்று மீண்டும் சுரங்கப்பாதை பணியின் போது குடிநீர் குழாய் உடைத்து சேதமானது.
இதனை சரி செய்ய, டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவு, நேர விரயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வினியோகம் பாதிப்பால், டவுன் பஞ்., நிர்வாகம் மீது, மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாய் சேதத்திற்கு, ரயில்வே நிர்வாகம் உரிய தொகை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.