/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 19, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மணவாசி பஞ்., பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர், 47. மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 16ல், உடல்நலம் சரியில்லாமல் இருக்கும், சித்தியை பார்ப்பதற்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்-றுள்ளார். பின்னர், நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பின்புறம் கதவின் பூட்டு திறக்கப்பட்டிருந்-தது. உள்ளே சென்று பார்த்தபோது, சாமி அறை, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது.
அதிலிருந்து, 13 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய-வந்தது. இது குறித்து சுந்தரம் கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.