/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூன் 14, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கரூர் ரயில்வே காலனி சேர்ந்தவர் மதன்மோகன், 56. கடந்த 9ல், வீட்டை பூட்டி விட்டு, வெளியூருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 9 பவுன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. கரூர் டவுன் போலீசார் திருடு போன வீட்டில் ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.