/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண் சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு கோவக்குளத்துக்கு பஸ் வசதி தேவை
/
கண் சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு கோவக்குளத்துக்கு பஸ் வசதி தேவை
கண் சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு கோவக்குளத்துக்கு பஸ் வசதி தேவை
கண் சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு கோவக்குளத்துக்கு பஸ் வசதி தேவை
ADDED : ஏப் 24, 2024 02:24 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் கிராமத்தில் அரசு மருத்துவமனை, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 3 கிலோ மீட்டர் பொது மக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 8:30 மணி, மதியம் 12:30 மணிக்கு அரசு பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பஸ் வசதி இல்லாததால், பொது மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் கண் மருத்துவ பிரிவு தொடங்கி, நான்கு மாதங்களாக, 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு, கண் மருத்துவர் அருண்பிரசாத் சிறந்த மருத்துவ வசதியுடன் அறுவை கிசிச்சை அளித்து வருகிறார். மருத்துவ கல்லுாரிக்கு
நிகராக கண் மருத்துவ சிகிச்சை நடந்து வருகிறது.
எனவே, பொது மக்கள் வந்து செல்ல கூடுதல் பஸ் வசதிகளை செய்து தர வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.