ADDED : அக் 01, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
கரூர்: புனித தெரசா அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்-ளியில், என்.எஸ்.எஸ்., திட்டத்தின்,
ஏழு நாள் முகாம், தலைமை-யாசிரியர் சகாயராணி தலைமையில் தொடங்கியது.முகாமை, கரூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மஞ்சுளா தொடங்கி வைத்தார். ஆலய உழவாரப்பணி, போதை ஒழிப்பு பேரணி, ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிடுதல், மரக்கன்-றுகள் நடுதல், துாய்மை பணி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்-ளது. முகாமில், கரூர் அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் சத்யா, திட்ட அலுவலர் கரோலின், உதவி திட்ட அலுவலர் ஜான்சி ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
