/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகள் பிரசாரம் நிறைவு
/
கரூர் லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகள் பிரசாரம் நிறைவு
கரூர் லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகள் பிரசாரம் நிறைவு
கரூர் லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகள் பிரசாரம் நிறைவு
ADDED : ஏப் 18, 2024 01:20 AM
கரூர், கரூரில், லோக்சபா தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலை
நிறைவடைந்தது.
கரூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., செந்தில்நாதன், காங்., ஜோதிமணி, அ.தி.மு.க., தங்கவேல், நாம் தமிழர் கட்சி கருப்பையா உள்பட, 54 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதமாக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று காலை, 11.00 மணிக்கு கரூர் மாநகராட்சி ராயனுார் பகுதியில் தொடங்கிய டூவிலர் பேரணி, தான்தோன்றிமலை அரசு கல்லுாரி, சுங்க கேட், பசுபதிபாளையம், ஐந்து ரோடு, வாங்கபாளையம், கோவை சாலை, செந்குந்தபுரம், 80 அடி சாலையில் நிறைவு செய்தனர். மாலை, 3:00 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகரில் தொடங்கிய டூவீலர் பேரணி, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், ராஜபுரம், எல்வனுார், புன்னசத்திரம், புகழி முருகன் கோவில் வழியாக வேலாயுதம்பாளையம் நால்ரோட்டில் நிறைவு
பெற்றது.
கரூர் காங்., வேட்பாளர் ஜோதிமணி, காந்திகிராமத்தில் இருந்து சுங்ககேட், லைட் ஹவுஸ் கார்னர் வழியாக பேரணியாக வந்து, கரூர் பஸ் ஸ்டாண்ட்டில் மனோகரா ரவுண்டானாவில் பிரசாரத்தை நிறைவு செய்தார். ராஜ்யசபா எம்.பி.,க்கள் சிவா, அப்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், கரூர் செம்மடை ரவுண்டானாவில் தொடங்கி, வாங்கபாளையம், வெங்கமேடு, தின்னப்பா கார்னர், வையாபுரி நகர், செந்குந்தர்பிரிவு சாலையில் நிறைவு செய்தார். அப்போது, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
* கரூர்-கோவை சாலை செங்குந்தபுரம் பிரிவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா, கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். பிறகு, தீரன் சின்னமலை பிறந்த நாளை யொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து, செங்குந்தபுரம் வழியாக சென்றனர்.

