ADDED : ஜூலை 21, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை;குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் பகவதி அம்மன் கோவில் திடலில், நேற்று முன்தினம் இரவு சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் குழு சார்பில், குத்துவிளக்கு பூஜை நடந்தது.
வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், வாழைப்பழம், அரிசி கொண்டு பூஜை செய்யப்பட்டது. உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்திடவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் குத்துவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.