/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
/
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
ADDED : ஜூலை 14, 2024 03:17 AM
குளித்தலை: குளித்தலை அரசு கலை கல்லுாரியில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மையம், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், நேற்று தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது. வேலைவாய்ப்பு மற்றும் திட்ட அலுவலர் உமாபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அன்பரசு (பொ) தலைமை வகித்தார்.
திருச்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்று-விப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்-குனர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். கண்காட்சியை, கல்-லுாரி முதல்வர் திறந்து வைத்தார். இதில், ஏராளமான மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், வேலைவாய்ப்பு அலுவலக செயல்பாடுகள் குறித்து, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு-வலர் சாந்தி விளக்கமளித்தார். இளைஞர் திறன் மேம்பாடு திட்ட அலுவலர் பத்மப்ரியா, இளைஞர் திறன் மேம்பாடு குறித்து பேசினார். மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்-வுகள் குறித்து, கரூர் இளம் தொழில் வல்லுனர் வீரகுமார் பேசினார். 'வளமான வாழ்விற்கு வழிகாட்டும் திறன் பயிற்சி' என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கரூர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தர்மலிங்கம் நன்றி கூறினார். தமிழ் துறைத்தலைவர் ஜெகதீசன், ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டாதேன்மொழி, வணிகவியல் துறை தலைவர் பெரியசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்-டனர்.