/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 01:40 AM
குளித்தலை,
குளித்தலை அடுத்த நங்கவரம், ஆசாரி தெருவை சேர்ந்தவர் மாப்பிள்ளை மீரா, 40; வக்கீல். இவருக்கு சொந்தமாக, வடக்கு மாடு விழுந்தான் பாறையில், 2 ஏக்கர், 24 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜூலை, 28ம் தேதி காலை, தன் வயலில் மாப்பிள்ளை மீரா நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த சுப்புசாமி மகள் கலாவதி, இவரது மகன், அடையாளம் தெரியாத இரண்டு பேர், மாப்பிள்ளை மீராவை தாக்கி, மின்மோட்டார்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, மாப்பிள்ளை மீரா கொடுத்த புகார்படி, கலாவதி, இவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் என, நான்கு பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.