/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளக்ஸ் பேனர் வைத்த தனுஷ் மன்ற நிர்வாகி மீது வழக்கு
/
பிளக்ஸ் பேனர் வைத்த தனுஷ் மன்ற நிர்வாகி மீது வழக்கு
பிளக்ஸ் பேனர் வைத்த தனுஷ் மன்ற நிர்வாகி மீது வழக்கு
பிளக்ஸ் பேனர் வைத்த தனுஷ் மன்ற நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2024 02:06 AM
கரூர்:கரூரில் அனுமதி இல்லாமல், பிளக்ஸ் பேனர் வைத்ததாக, நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் நடித்துள்ள, ராயன் திரைப்படம் வெளியானது.
கரூரில் தின்னப்பா தியேட்டரில், ராயன் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, கரூர் ஒன்றிய நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் தினேஷ், 38, தின்னப்பா தியேட்டர் எதிரில், ராயன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என, பிளக்ஸ் பேனரை வைத்திருந்தார்.ஆனால், பிளக்ஸ் பேனர் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக, போலீஸ் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, ரசிகர் மன்ற தலைவர் தினேஷ், பேனரை தயார் செய்த ஆர்.ஆர்., டிசைன் பிரின்டர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.