/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
/
லாலாப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
லாலாப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
லாலாப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஆக 02, 2024 01:31 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டையில், மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், சிந்தலவாடி, கள்ளப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுடன், முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். மின்சார வாரியம், கூட்டுறவு, ஊரக வளர்ச்சி காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை, தோட்டக்கலைதுறை உள்பட பல துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கதிரவன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், கள்ளப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சக்தி வேல், சிந்தலவாடி பஞ்சாயத்து தலைவர் வெண்ணிலா, கருப்பத்துார் பஞ்சாயத்து தலைவர் ரெங்கம்மாள் மற்றும் யூனியன் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.