/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியாற்றில் குளிக்க போலீசார் தடை வாய்க்காலில் நீராடிய பொதுமக்கள்
/
காவிரியாற்றில் குளிக்க போலீசார் தடை வாய்க்காலில் நீராடிய பொதுமக்கள்
காவிரியாற்றில் குளிக்க போலீசார் தடை வாய்க்காலில் நீராடிய பொதுமக்கள்
காவிரியாற்றில் குளிக்க போலீசார் தடை வாய்க்காலில் நீராடிய பொதுமக்கள்
ADDED : ஆக 04, 2024 01:36 AM
கரூர், வெள்ளப்பெருக்கால், கரூர் அருகே, நெரூர் பகுதி காவிரியாற்றில் பொதுமக்கள் குளிக்க, போலீசார் தடை விதித்தனர். இதனால், பொதுமக்கள் பாசன கிளை வாய்க்கால்களில் புனித நீராடினர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளான தவிட்டுப்பாளையம் முதல் குளித்தலை வரை பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் தண்ணீர், கரூர் மாவட்டத்தின் காவிரியாற்று பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 143 கன அடி தண்ணீர் தவிட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தது. இதனால், தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனுார் உள்ளிட்ட பகுதிகளில், காவிரியாற்று பகுதிகளின் நுழைவுவாயில் பகுதிகளில் போலீசார் தடுப்புகளை வைத்து, பொது மக்கள் புனித நீராட தடை விதித்தனர். இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் ஆடிப்பெருக்கையொட்டி, பாசன கிளை வாய்க்காலில் புனித நீராடி விட்டு சென்றனர்.
* வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரியாற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. கரூர் நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று, அமராவதி ஆற்றுப் பகுதிகளான பெரிய ஆண்டாங்கோவில், லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் பகுதிகளில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.