/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காமராஜ் தினசரி மார்க்கெட்டில் தரைக்கடைகள் அகற்றம்
/
காமராஜ் தினசரி மார்க்கெட்டில் தரைக்கடைகள் அகற்றம்
ADDED : ஆக 31, 2024 12:32 AM
கரூர்: கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட்டில், தரைக்கடைகளை, மாநக-ராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான, காமராஜ் தினசரி மார்க்-கெட்டில், வாடகை செலுத்தாத சில கடைகளுக்கு, சமீபத்தில் பூட்டு போடப்பட்டது. ஆனால், பூட்டு போடப்பட்ட கடைக-ளுக்கு முன்புறம் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு
செய்து, சிலர் தரைக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், பூட்டு போடப்பட்ட கடைகளை, மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று பூட்டு போடப்பட்ட கடைகளுக்கு முன்னால் அமைக்கப்பட் டிருந்த, 20க்கும் மேற்பட்ட தரைக்க-டைகளை மாநகராட்சி துாய்மை ஆய்வாளர் மதிவாணன் தலை-மையிலான ஊழியர்கள் அகற்றினர். இதனால்,
மார்க்கெட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.