/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி நீர் பச்சை நிறம் குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேகரிப்பு
/
காவிரி நீர் பச்சை நிறம் குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேகரிப்பு
காவிரி நீர் பச்சை நிறம் குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேகரிப்பு
காவிரி நீர் பச்சை நிறம் குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேகரிப்பு
ADDED : ஜூலை 02, 2024 07:43 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீர், பச்சை நிறத்தில் இருந்ததால், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுசூழல் பொறியாளர் குழுவினர், நேரில் ஆய்வு செய்து காவிரி நீரை ஆய்வுக்காக மாதிரி எடுக்கும் பணி-களில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனுாரில் கதவணை உள்-ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்பட்டு, கரூர் உள்-பட 15 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்-ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டுள்ளது. கதவ-ணையில் பச்சை நிறத்தில் தண்ணீர் வரத்தாகி-றது. காவிரி நீர் பச்சை நிறத்தில் இருப்பதால் விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று, மாயனுார் கதவணைக்கு வந்த, கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சதிஷ்குமார் தலை-மையிலான குழுவினர், அங்கு தேக்கி வைக்கப்-படும் காவிரி நீரை ஆய்வுக்காக மாதிரி எடுத்-தனர். இது குறித்து மாயனுார் கதவணை நீர் வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக் கூறு-கையில், ''காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் கதவ-ணையில் சேமிக்கப்படுகிறது. பாசனத்திற்கு தேவைப்படும் போது, டெல்டாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தற்போது பச்சை நிறத்தில் தண்ணீர் உள்ளதால் ஆய்வுக்காக மாதிரி எடுக்கப்-பட்டுள்ளது. ஆய்வுக்கு பின், எதனால் மாறியது என்று தெரிய வரும்,'' என்றார்.