/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை, ரெங்காநாதபுரத்தில் சிவப்பு சோளம் அறுவடை
/
கட்டளை, ரெங்காநாதபுரத்தில் சிவப்பு சோளம் அறுவடை
ADDED : ஜூலை 21, 2024 03:02 AM
கிருஷ்ணராயபுரம்:கட்டளை, ரெங்காநாதபுரம் ஆகிய பகுதிகளில் சிவப்பு சோளம் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளை, ரெங்காநாதபுரம், வீரராக்கியம் பகுதிகளில் விவசாயிகள் சிவப்பு சோளம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கதிர்கள் வளர்ந்துள்ளது. முதிர்ந்த கதிர்கள் மழைக்கு முன்பு, அறுவடை செய்யும் வகையில் விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது.
அறுவடை செய்யப்படும் சிவப்பு சோளக் கதிர்கள் டிராக்டர் இயந்திரம் கொண்டு அடிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர், துாய்மை செய்து மூட்டைகளில் கட்டி பாதுகாக்கப்படுகிறது. சோளப் பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு சோளத்தட்டு தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருவதால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.