/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கம், பனையூர் காட்டுவாரியில் இரண்டு பாலங்கள் கட்டும் பணி தீவிரம்
/
நங்கம், பனையூர் காட்டுவாரியில் இரண்டு பாலங்கள் கட்டும் பணி தீவிரம்
நங்கம், பனையூர் காட்டுவாரியில் இரண்டு பாலங்கள் கட்டும் பணி தீவிரம்
நங்கம், பனையூர் காட்டுவாரியில் இரண்டு பாலங்கள் கட்டும் பணி தீவிரம்
ADDED : மே 18, 2024 01:41 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., பெருகமணி, நங்கவரம், நெய்தலுார் வழியாக காவல்காரன்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து நங்கம் காட்டுவாரி, பனையூர் காட்டு வாரி செல்கிறது.
இந்த காட்டு வாரியில் இருந்த இரண்டு பாலங்கள் சேதம் ஏற்பட்டு, அபாய நிலையில் இருந்து வந்தது. இந்த பாலங்களை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டவேண்டும் என, தமிழக அரசுக்கு பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், ஆறு மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி துவங்கியது. இந்த இரண்டு பாலம் கட்டும்பணியை, குளித்தலை நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டபொறியாளர் செந்தில்குமரன் மேற்பார்வை செய்தார்.
இளநிலை பொறியாளர்
சந்திரமோகன், ஆர்.ஐ., சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
உதவி கோட்டபொறியாளர் செந்தில்குமரன், கட்டுமான பணி ஒப்பந்ததாரர் பழனிசாமியிடம் கட்டு மான பணி தரமாகவும், விரைந்து பணிகள் முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என, கேட்டுக் கொண்டார்.