/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடரும் கோடை மழை புதிய முறையில் சோளம் சாகுபடி தீவிரம்
/
தொடரும் கோடை மழை புதிய முறையில் சோளம் சாகுபடி தீவிரம்
தொடரும் கோடை மழை புதிய முறையில் சோளம் சாகுபடி தீவிரம்
தொடரும் கோடை மழை புதிய முறையில் சோளம் சாகுபடி தீவிரம்
ADDED : மே 16, 2024 04:04 AM
கரூர்: கோடை மழை காரணமாக, கரூர் மாவட்ட ஆற்றுப்பகுதிகளில், புதிய முறையில் சோளம் சாகுபடி பணி தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், 39.44 அடியை தாண்டிய நிலையில் உள்ளது. சம்பா சாகுபடிக்காக, அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்து வரும் நிலையில், புதிய முறையில் சோளம் பயிரிட நிலத்தை டிராக்டர், மாட்டு வண்டி மூலம் சமன்படுத்தும் பணி சமீபத்தில் தொடங்கியது. தற்போது, அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி,
க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் புதிய முறையில், சோளம் சாகுபடி பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: சோளம் குறுகிய கால பயிராகும். பெரும்பாலும், மழையை நம்பிதான் சோளம் பயிரிடுவது வழக்கம். தற்போது, கோடை மழை திருப்திகரமாக பெய்த தொடங்கியதால், கால்நடைகள் தீவனத்துக்காக, சோளம் சாகுபடி தொடங்கியுள்ளது. வழக்கமாக, வயல்களில் நேரிடையாக சோளத்தை, விதைப்போம். தற்போது, நெல் சாகுபடி பாணியில், சோளத்தை முதலில் நாற்று விட்டு, அதை பிடுங்கி வயல்களில் நேரடியாக நட உள்ளோம். இதன்மூலம், மகசூல் கூடுதலாக கிடைக்கும்.
ஒருவேளை, கோடை மழை தவறும் பட்சத்தில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி சோளம் சாகுபடி செய்வோம். இவ்வாறு தெரிவித்தனர்.