ADDED : செப் 15, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், கொத்தமல்லி சாகுபடி பணி-களில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கப்பட்டி, பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, சிவாயம் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள், குறைந்த நீரில் வருமானம் தரக்கூடிய கொத்தமல்லி சாகுபடி பணிகளில் தீவிர-மாக ஈடுபட்டுள்ளனர். இதில் அதிகமாக நாட்டு கொத்தமல்லி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கிணற்று நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. செடிகள் வளர்ந்தவுடன் பறித்து உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குறைந்த நாட்களில் வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்-வத்துடன் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.