/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சேதமடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
/
கரூர் அருகே சேதமடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர் அருகே சேதமடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர் அருகே சேதமடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2024 04:16 AM
கரூர்: கரூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கட்டப்பட்ட பூங்கா, பராம-ரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது.
கரூர், வெள்ளியணை சாலை தான்தோன்றி மலை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில், சில ஆண்டுகளுக்கு முன்பு சுகா-தார பூங்கா அமைக்கப்பட்டது. அதில், திறந்த வெளியை கழிப்பி-டமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், வீட்டில் கழிப்-பிடம் கட்ட வேண்டியதன் அவசியம், இந்தியாவில் பயன்படுத்-தப்பட்டு வரும் கழிப்பிட வகைகள் குறித்த தகவல்கள் மாடல் கட்டடங்களாக கட்டப்பட்டது.
அங்கு, பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து சென்று, சுகா-தாரம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களாக சுகாதார பூங்கா பூட்டி வைக்கப்-பட்டுள்ளது. அதில் உள்ள மாடல் கட்டடங்கள் சேதமடைந்துள்-ளது. நாடு முழுவதும், துாய்மை இந்தியா என்ற பெயரில், சுகா-தார திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விழிப்புணர்வை ஏற்ப-டுத்தி வருகிறது.
இந்நிலையில், தான்தோன்றிமலையில் சுகாதாரத்தை விளக்கி கட்டப்பட்ட சுகாதார பூங்கா பயனற்ற நிலையில் உள்ளது. அதை சீரமைத்து, மீண்டும் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து சென்று, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.