ADDED : ஜூலை 28, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், இடையப்பட்டி பஞ்., சேவாப்பூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 48, விவசாயி.
இவரது, 17 வயது மகள் கடந்த, 24ல் இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு, 10:00 மணிக்கு மேல் துாங்கினார். மறுநாள் பார்த்தபோது, மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, வெள்ளைச்சாமி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.