/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை
/
கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை
ADDED : ஆக 18, 2024 03:06 AM
கரூர்: தமிழகத்தில் கடலோர பகுதிகளில், மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என, நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்தது.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிறகு நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில் அதி-காலை, 4:00 மணி வரை நீடித்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 62.80, அரவக்-குறிச்சி, 74, அணைப்பாளையம், 52, க.பரமத்தி, 24.60, மாயனுார், 7, பஞ்சப் பட்டி, 3.60, மயிலம்பட்டி, 1.60 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 18.83 மி.மீ., மழை பதிவானது.

