/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை
/
ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம், பாசன வாய்க்காலில்
ஆகாயத்தாமரைகள் அதிகளவு வளர்ந்துள்ளதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் மங்கம்மாள் சாலை வழியாக கிளை பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது, விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கிளை பாசன வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கிளை பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் செடிகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.