ADDED : ஜூலை 02, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில், நேற்று திருச்சி டி.ஐ.ஜி., மனோகர் ஆய்வு மேற்-கொண்டார்.
இந்த ஆய்வில் கொலை குற்றம், வழிப்பறி வழக்கு, திருட்டு வழக்கு, வெடி மருந்து இருப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு மேற்-கொண்டார். தொடர்ந்து வளாகத்தில் உள்ள கணினி அறை, ஆயுத கிடங்கு, கைதி அறை உள்-ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர் வளா-கத்தில் டி.ஐ.ஜி., மனோகர் மரக்கன்றுகளை நட்டார்.
ஆய்வின் போது கரூர் எஸ்.பி., பிரபாகர், குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், தோகை-மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ., பாலசுப்-பிரமணி, ரெத்தினகிரி ஆகியோர் உடனிருந்-தனர்.