/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெற்றிலை கொடிகளில் நோய் பரவல்; கட்டுப்படுத்த கோரிக்கை
/
வெற்றிலை கொடிகளில் நோய் பரவல்; கட்டுப்படுத்த கோரிக்கை
வெற்றிலை கொடிகளில் நோய் பரவல்; கட்டுப்படுத்த கோரிக்கை
வெற்றிலை கொடிகளில் நோய் பரவல்; கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : மார் 31, 2024 03:59 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெற்றிலைகளில் நோய் தாக்குதல் காரணமாக கொடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ஆகிய பகுதியில் விவசாயிகள், வாய்க்கால் பாசன முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெற்றிலை கொடிகளில் நோய் தாக்குதல் பரவி வருகிறது. இதனால் கொடிகள் வளர்ந்து வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொடிகளில் பரவி வரும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கடந்த ஆண்டு வெற்றிலைக்கு எந்த விதமான பாதிப்பும் இன்றி வளர்ந்து வந்தது.
தற்போது வெயில் அதிகம் காரணமாக, வெற்றிலை கொடிகளில் கள்ளிப்பூச்சி நோய் தாக்குதல் பரவியுள்ளது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கபட்ட நிலையில் பயன் அளிக்கவில்லை. இதனால் கொடிகள் கருகி வருகிறது. இதனை தடுக்க தகுந்த ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும்,' என்றனர்.

