ADDED : ஏப் 04, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: கரூர் மாவட்ட தி.மு.க., விவசாய துணை அமைப்பாளர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள எல்லப்பன் நாயக்கன்புதுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் கரூர் தி.மு.க., மாவட்ட விவசாய அணியின், துணை அமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டில் பணம் இருப்பதாக, பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று இரவு 7:00 மணியளவில் இவரது வீட்டுக்கு சென்ற, கரூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இரவு வரை சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

