/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
கரூரில் தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 06, 2024 02:25 AM
கரூர் கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அனைத்து இடங்களிலும், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அருந்ததியினர், 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, அதை பெற்று தந்த முதல்வர் ஸ்டாலினிக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகர செயலாளர் கனகராஜ், மேயர் கவிதா, பகுதி செயலர்கள்
சுப்ரமணி, ஜோதிபாசு, குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.